Bookmark : Twitter Facebook Yahoo Gbuzz Email Sharethis
Facebook Twitter
news
news
MUMBAI DHARAVI CORONO UPDATE STORY
Posted on 29th Jul, 2020 15:05:37
Description:
ஆசியாவின் குடிசை பகுதியான தாராவியில் கொரோனா தொற்று சங்கிலி உடைக்கபட்டு சாதனை கொரோனாவை கூட்டு முயற்சியால் மட்டுமே வெல்ல முடியும் என்கிற உண்ணமையை தாராவி, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே உணர்த்தும் பாடமாக உள்ளது என்றால் மிகையில்லை..அங்கு எப்படி உடைக்க பட்டது என்பது குறித்த சிறப்பு..பார்வை... தாராவி..இரண்டரை சதுர கிலோ மீட்டர் அடங்கிய பகுதி .உயர்ந்த மாளிகை கட்டிங்கள் நிறைந்த மும்பைக்கு தனிதீவாய் தெரிவது தான் தாராவி... இந்திய தேசத்தின் பொருளாதார தலைநகரமாம் மும்பை என்று சொல்ல வந்தால் , ஆசியாவின் மிகப்பெரிய குடிசைகளின் தொகுப்பு என்ற பெருமை தாராவிக்கு உள்ளது.. ஒட்டு மொத்த பரப்பளவோ 2½ சதுர கி.மீ. தான் . அதில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்பதுவும் தாராவியின் இன்னொரு அதிசயம்தானே.. வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள் என்றால் தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்று அங்கு வாழும் தமிழர்களுக்கு இரண்டாவது தாய்வீடு என்றால் அது தாராவிதான். மக்கள் அடர்த்திக்கு உதராணம் காட்டவேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு தாராவியை காட்டிவிடலாம் அந்த அளவிற்கு அப்படியொரு மக்கள் அடர்த்தி. 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் இரண்டு அல்லது மூன்று பேர் வாழும் நாட்டில் சர்வ சாதாரணமாக 10 பேர் வாழ்வது இந்தியாவிலேயே தாராவியில் மட்டும்தான். எல்லோரும் அச்சபட்டார்கள் இங்கு கொரனோவை கட்டுபடுத்த முடியுமா? அது தான் நடைமுறை சாத்தியமா? என்று கேள்வி எழுப்பாதவர்களே இல்லை... அன்றாட காய்ச்சிகளால் யென உலகத்தினரால் அறியபட்ட தாராவியில் அனைவரும் தினக்கூலி தொழிலாளர்கள் தான்..வெளியே சென்று வேலை பார்த்தால் தான் உணவு உறுதி என்ற நிலைதான்... இப்படி பல பின்னடவுகள் கொண்ட தாராவியின் பாலிகா நகரில் கொரோனா தொற்று ஏப்ரல் 1-ந் தேதி கண்டறியபட்டது.. மும்பை அதிர்ந்துதான் போனது. தாராவியில் ஒருவருக்கு தொற்று என்றால் அது என்ன வேகத்தில் மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து உண்டு என்று உணர்ந்தவர்கள் அச்சப்பட்டார்கள். ஆதங்கபட்டார்கள்.. படுத்து உறங்கும் இடமே குறைவாக இருக்கும் போது... தாராவியில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு ஏறத்தாழ 450 முதல் 500 கழிவறைகள்தான் உள்ளன... ஒரே கழிவறையை நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் சூழல் தான்... ஆனால் 3 மாத காலத்தில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத்தான் தொற்று பாதித்து இருக்கிறது. பலி எண்ணிக்கை 80-க்கு கொஞ்சம் அதிகம். தொற்று பாதித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். கடந்த மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 43 பேருக்கு தொற்று பாதித்தது. இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இது 19 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு வீதம் இரட்டிப்பு ஆவதற்கு 18 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து பின்பற்ற வைத்து தீவிரமாய் கண்காணித்தது, அதிகளவிலான பரிசோதனைகள் நடத்த பட்டது... தினக்கூலி தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கியது என கொரோனாவை கட்டுப்படுத்தியதற்கு பல காரணங்களை அடுக்குகிறார்கள்...அங்குள்ள அதிகாரிகள். கொரோனா தொற்று நோய் பரவலை தடுத்தாக வேண்டும் என்று வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்கள் அதிகாரிகள்.... சந்தேகத்துக்குரியவர்கள் தனிமைப்படுத்த பட்டார்கள்... பாதிக்கப்பட்டவர்களின் தடம் அறிந்து பரிசோதனைகள் நடத்தி அவர்களை தனிமைப்படுத்து ம் முயற்சியை தீவீராமாக செய்த அதிகாரிகள் அதோடு நிறுத்திடமால்... நீக்கமற காய்ச்சல் தொற்று தடுப்பு முகாம்களை முறையாக நடத்தியது அரசு... வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் யாருக்கேனும் தொற்று பாதிப்பு, அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பெயரவில் செய்திடாமால் தினந்தோறும் செய்யும் முதல் கடமையாக செய்தது மும்பை நிர்வாகம்.. 5லட்சம் அதிகமான மக்கள் தொகை கொண்ட தாராவியில் அமைக்கப்ட்ட காய்ச்சல் முகாம்களில் மட்டுமே 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடித்திருக்கிறார்கள்.. ஒவ்வொரு முகாமிலும் 6முதல் எட்டு வரை மருத்துவர்கள் சுகாதார ஊழியர்கள் அனைவரும் சுழற்சி அடிப்மடையில் அலற்ச்சி பார்க்கமால் பணியாற்றி தற்போது மிகபெரிய அளவில் கட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்... அரசு மருத்துவர்கள் மட்டுமில்லாது....தனியார் மருத்துவர்களும் இணைந்து சேவையாற்றி மாற்றி அமைத்திருக்கிறார்கள் தாராவியின் தலை எழுத்தை... காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அந்த இடத்திலேயே கொரோனா பரிசோதனை ஒருபக்கமும் , அப்படி தொற்று யென்று தெரிய வந்தால் அங்கு இருந்தே தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பி வைக்கபட்டனர்.. பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், விளையாட்டு வளாகங்கள் எல்லாவற்றையும் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றபட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ப்டடு வருகிறது... முகாம்களில் எவருக்காகவது உடல்நிலை மோசமானால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அரசு அல்லது 3 தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்டுகிறது... . நடத்த பட்ட காய்ச்சல் முகாம்கள் கொரோனா தொற்று பரவலைத்தடுப்பதற்கு நல்ல பலன் கை மேல் கிட்டியது... மக்கள் எல்லோரும் தாமாக முன்வந்து சோதித்துக்கொண்டார்கள். சில நேரங்களில் பரிசோதனை செய்து கொண்டு விட வேண்டும் என்று கருதி தங்கள் வயதைக்கூட அதிகமாக சொன்னவர்களும் உண்டு என்கிறார்கள் அதிகாரிகள்.. மக்களிடம் பயமும் இருந்த அதே வேளையில் . நல்ல விழிப்புணர்வும் இருந்தது. . தாராவியில் ஏப்ரல் முதல் 11 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மற்ற ‘ஹாட்ஸ்பாட்’களில் நோய்த்தொற்று தீவிரமாகிற நிலையில் தாராவியில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.#mumbai dharvi success story against covid 19#citycornerpaper
 
 
Total Views : 1027
|
Bookmark : Digg Twitter StumbleUpon Technorati Delicious Facebook Yahoo GBuzz
|
Rate this Video:
( Rollover Stars to Rate )
Average Rating : 0 / 5 Total : 0 Votes
Post a Comment
Your Name :
Security Code :


-- No Comments. Be the First to add comments ! --